மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகை; தமிழக கவர்னர் வாழ்த்து + "||" + Tamil Nadu Governor wishes Eid Mubarak

பக்ரீத் பண்டிகை; தமிழக கவர்னர் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை; தமிழக கவர்னர் வாழ்த்து
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

“ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி நம்முடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனித நாள் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மனிதகுலத்துக்கான சேவையை குறிக்கிறது. 

இந்த திருநாளில் பிரார்த்தனை, இரக்கம், தாராள மனப்பான்மை ஆகியவற்றின் பாதையை கடைப்பிடிக்க நாம் அனைவரும் தீர்மானிப்போம். இந்த திருவிழா அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக முஸ்லிம்களுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து
தமிழகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. 100-வது பிறந்தநாள்: என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
100-வது பிறந்தநாளை கொண்டாடிய என்.சங்கரய்யாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவரின் தியாகத்தையும், எளிமையையும் போற்றுவதாக புகழாரம் சூட்டினார்.
3. உலக இளைஞர் திறன் நாள்: இளைஞர்களின் திறன் உலக அளவில் ஒளிரட்டும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
உலக இளைஞர் திறன் நாள்: இளைஞர்களின் திறன் உலக அளவில் ஒளிரட்டும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து.
4. என்.சங்கரய்யா 100-வது பிறந்தநாள்: வைகோ வாழ்த்து
என்.சங்கரய்யா 100-வது பிறந்தநாள்: வைகோ வாழ்த்து.
5. 100வது ஆண்டில் முதுபெரும் தலைவர் சங்கரய்யா; கேரள முதல் மந்திரி வாழ்த்து
நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சங்கரய்யாவுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.