தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு - முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு


தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு - முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 5:21 AM GMT (Updated: 21 July 2021 5:21 AM GMT)

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் குறைவான சேர்க்கை குறித்து ஆய்வு செய்து முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, பொறியியல் / வேளாண்மை / கால்நடை / மீன்வளம்/ சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய, ஓய்வுபெற்ற டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தக் குழு முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி தொழிற்படிப்புகளில் கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர், எந்த அளவு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்பன உள்ளிட்ட அம்சங்களுடன் 86 பக்க அறிக்கையை முதல்-அமைச்சரிடம் வழங்கியுள்ளனர். ஆணையம் பரிந்துரைத்துள்ள உள் ஒதுக்கீட்டை பரிசீலனை செய்து, இந்த ஆண்டே உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story