மாநில செய்திகள்

தியாகத் திருநாளை நினைவு கூறும் பக்ரீத் பண்டிகை - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை + "||" + Bakrid Festival of Sacrifice Special prayers in mosques

தியாகத் திருநாளை நினைவு கூறும் பக்ரீத் பண்டிகை - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

தியாகத் திருநாளை நினைவு கூறும் பக்ரீத் பண்டிகை - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
சென்னை,

தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையானது, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

இன்றைய தினம் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இஸ்லாமியர்கள் இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை, தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு இறைவனின் பெயரால் விலங்குகளை பலியிடுவது குர்பானி என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் இறைதூதர்களில் ஒருவராக நம்பப்படும் இப்ராஹீம் நபி, தனக்கு கனவின் மூலம் இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக தனது மகன் இஸ்மாயிலை பலியிடத் துணிந்தார். அவரை தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்குப் பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார்.

இஸ்மாயிலின் இந்த தியாகத்தைப் போற்றும் வகையில் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்போதைய கொரோனா சூழ்நிலையில், நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. சில இடங்களில் குறைவான நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி தொழுகையை நிறைவேற்றி, பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.