மாநில செய்திகள்

பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி + "||" + The bond registration department will be completely restructured - Minister Murthy

பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி

பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி
பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரை,

மறைந்த நடிகர் சிவாஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன் உள்ள அவரது சிலைக்கு பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

பத்திரப் பதிவுத் துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம். பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும். பத்திரப் பதிவுத் துறையில் வந்துள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எளிமையாக பத்திரப்பதிவு செய்ய, அந்த துறையில் மாற்றம் கொண்டு வரப்படும். திரையரங்கம் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பத்திரப்பதிவின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பை விட பத்திர பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என பதிவுத்துறை தலைவர் அனைத்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.