மாநில செய்திகள்

சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு 'போக்சோ' சட்டம் குறித்து பயிற்சி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Special Court Judges Training Court Order on 'Pokcho' Act

சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு 'போக்சோ' சட்டம் குறித்து பயிற்சி ஐகோர்ட்டு உத்தரவு

சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு 'போக்சோ' சட்டம் குறித்து பயிற்சி ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் மீது புதுச்சத்திரம் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் சிறப்பு கோர்ட்டு, வெங்கடாச்சலத்துக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு தண்டனையும் விதித்து, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.


தண்டனை உறுதி

இந்த தீர்ப்பை எதிர்த்து வெங்கடாச்சலம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

வெங்கடாச்சலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். எனவே, மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு வழங்கியுள்ள தண்டனையை உறுதி செய்கிறேன். ஆனால், போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்கிறேன். இரு பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தண்டனையை அனுபவிக்கும் வகையில் வெங்கடாச்சலத்தை சிறையில் அடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை நாமக்கல் மகளிர் கோர்ட்டு மேற்கொள்ள வேண்டும்.

நீதிபதிகளுக்கு பயிற்சி

போக்சோ சிறப்பு கோர்ட்டுகளில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சிகளை வழங்க வேண்டும். இதற்கான அனுமதியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம், ஐகோர்ட்டு தலைமை பதிவாளரும், தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகடாமி இயக்குனரும் பெற வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை ஏன் அமைக்கக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க., ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் ரூ.9 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கிற்கு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. கோவில் சொத்துகளை பாதுகாக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
கோவில் சொத்துகளை பாதுகாக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு.
5. புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கொரோனா: முழுமையான ஆய்வறிக்கை அளிக்க கவர்னர் உத்தரவு
புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் முழுமையான ஆய்வறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.