மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் நடராஜன் தி.மு.க.வில் இணைந்தார் + "||" + In the presence of MK Stalin, the former AIADMK Minister Natarajan joined the DMK

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் நடராஜன் தி.மு.க.வில் இணைந்தார்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் நடராஜன் தி.மு.க.வில் இணைந்தார்
முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மற்றும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை,

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் நேற்று இணைந்தனர்.

இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


முன்னாள் அமைச்சர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், ராமநாதபுரம் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் 10 ஊராட்சி மன்ற தலைவர்கள், 4 ஒன்றிய குழு உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.ராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நாஞ்சில் டொமினிக் மற்றும் நிர்வாகிகள் என 70-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள் பி.ஜி.நாராயணன், என்.ஆர்.கோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வி முருகேசன் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக–் கொண்டனர்.

அ.தி.மு.க., அ.ம.மு.க.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், ஈச்சம்பாடி ஊராட்சி தலைவர், மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர், ஜக்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அ.ம.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. நிர்வாகிகள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பெருந்தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த ப.லட்சுமி தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

நாமக்கல் மேற்கு மாவட்டம், அ.ம.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பி.பி.சாமிநாதன், மாநில மாணவர் அணி இணை செயலாளர் எம்.டி.வைரமணி மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். சேலம் மத்திய மாவட்டம் அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.இ.வெங்கடாசலம் மற்றும் அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் ஒன்றிய, நகர, நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

உறுப்பினர் அட்டை

தி.மு.க.வில் இணைந்தவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று, தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வில், தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, அமைச்சர்கள் சக்கரபாணி, ராஜகண்ணப்பன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.