மாநில செய்திகள்

வைகை அணையில் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + Water level rise in Vaigai Dam flood warning issued

வைகை அணையில் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற்று வருகின்றனர். மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உயர்ந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.44 அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1,011 கன அடியாகவும், நீர் திறப்பு 769 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5,430 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் கரையோரம் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வைகை அணையில் உள்ள அபாய சங்கு 2 முறை ஒலிக்கப்பட்டது. 69 அடியாக உயர்ந்தவுடன் உபரியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வைகை அணையை வரும் 4 ஆம் தேதி திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வைகை அணையை வரும் 4 ஆம் தேதியில் இருந்து 120 நாட்களுக்கு திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2. 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்க வாய்ப்பு
வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டி உள்ளதால் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் முதல் வாரம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
3. வைகை அணையில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு
வைகை அணையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சரியான நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.