மாநில செய்திகள்

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து - மீட்பு பணிகள் தீவிரம் + "||" + Fire at a private bulding in Anna Salai rescue operations underway

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்
சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,

சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகே உள்ள 5 மாடி கட்டடத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் 3-வது மாடியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எழும்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், ராட்சதக் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. தற்போது தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ வேகமாக பரவுவதால், மேலும் சில தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 12-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
2. ஜூலை 27: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 11-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
3. சென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
4. சென்னையில் நாளை முதல் நிமோனியா தடுப்பூசி
சென்னையில் நாளை முதல் நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட உள்ளது.
5. சென்னை இரண்டாவது விமான நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.