கள்ளக்குறிச்சியில் அமைச்சர்கள் வாகனத்தை மறித்து கோரிக்கை மனுக்களை அளித்த கிராம மக்கள்


கள்ளக்குறிச்சியில் அமைச்சர்கள் வாகனத்தை மறித்து கோரிக்கை மனுக்களை அளித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 22 July 2021 9:37 AM GMT (Updated: 22 July 2021 9:37 AM GMT)

கள்ளக்குறிச்சியில் அமைச்சர்கள் சென்ற வாகனத்தை மறித்து, கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே மேட்டாத்தூரில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வாகனத்தை மறித்து கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தங்கள் கிராமத்தை இணைத்துள்ளதால், அரசின் சேவைகளை பெற முடியவில்லை என அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமான போது தங்கள் ஊரும் அதன் கீழ் வந்ததாகவும், சிலரின் சுய விருப்பத்திற்காக விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் தங்கள் கிராமத்தைச் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். காரில் இருந்தவாறு மக்கள் அளித்த மனுக்களை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார்.

அதே காரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனும் உடன் இருந்தார். மக்கள் அளித்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் இருவரும் உறுதியளித்தனர். கிராம மக்களின் இந்த திடீர் முற்றுகையால் அப்பகுதியில் சிறிதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story