முன்னாள் முதல்-அமைச்சர் வெற்றி பெற்றது செல்லாது; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


முன்னாள் முதல்-அமைச்சர் வெற்றி பெற்றது செல்லாது; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 22 July 2021 6:28 PM GMT (Updated: 22 July 2021 6:28 PM GMT)

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.





சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஓ. பன்னீர்செல்வம், தங்க தமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் போடி தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

அதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாக்காளர் மிலானி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




Next Story