மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை மனு + "||" + Former minister Manikandan has filed a petition in the Saidapet court seeking Rs 10 crore in damages

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை மனு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை மனு
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை மனு.
ஆலந்தூர்,

நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மணிகண்டன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


இந்த நிலையில் சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நடிகை தரப்பில் நஷ்டஈடு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்போது பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி மோசடி செய்ததால் உடல் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்பட இடைக்கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிடவேண்டும்” என அதில் கூறி உள்ளார்.

இந்த மனு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டுவிட்டர் பக்கம் முடக்கம்: நடிகை குஷ்பு டி.ஜி.பி.யிடம் பரபரப்பு புகார் மனு
நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுத்து விட்டு பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.
2. அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை நியமிக்க தடை கேட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு
அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை நியமிக்க தடை கேட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3. அரசின் அடிப்படை கடமையை எதிர்த்து பா.ஜ.க. தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு அரசின் அடிப்படை கடமையையும், பணியையும் தடுக்கும்விதமாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
4. 'யூ-டியூப்'பில் ஆபாச பேச்சு: பப்ஜி மதன் ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு
'யூ-டியூப்'பில் ஆபாச பேச்சு: பப்ஜி மதன் ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு விசாரணை தள்ளிவைப்பு.
5. திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி பெண்ணிடம் மனு வாங்கி சென்ற மு.க.ஸ்டாலின்
திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி பெண்ணிடம் மனு வாங்கி சென்ற மு.க.ஸ்டாலின்.