மாநில செய்திகள்

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Karthi Chidambaram's appeal case adjourned

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்தனர்.

இதற்காக ரொக்கமாக பெறப்பட்ட ரூ.6.38 கோடியை வருமான வரி கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கடந்த 2014-2015 மற்றும் 2015-2016 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்வது குறித்து வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.


இதுகுறித்து, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், வருமான வரி கணக்கு மறுமதிப்பீடு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மற்றொரு வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்பவர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
உயிருடன் இருப்பவர்கள், வாக்கு அளிக்க தகுதியானவர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருப்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு 'போக்சோ' சட்டம் குறித்து பயிற்சி ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை ஏன் அமைக்கக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க., ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் ரூ.9 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கிற்கு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. கோவில் சொத்துகளை பாதுகாக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
கோவில் சொத்துகளை பாதுகாக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.