மாநில செய்திகள்

நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் + "||" + Identify and implement practical plans for pumping funnel projects

நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்

நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்
நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எரிசக்தி துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமை செயலாளர் இறையன்பு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


இந்த கூட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்திடவும், பசுமை வழித்தடம் 2-வது பகுதியை அமைக்க புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிடமிருந்து மானியத்தை விரைந்துபெற்று பணிகளை முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்உற்பத்தி திட்டப்பணிகள் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

செல்போன் செயலி

நிலக்கரி கையாளுவதில் ஏற்படும் போக்குவரத்து செலவீனங்களை குறைக்கவும், தமிழகத்துக்கு ஒப்பந்தப்படி கிடைக்கவேண்டிய நிலக்கரி சதவீதத்தை பெற அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இறக்குமதி நிலக்கரியை வருடாந்திர ஒப்பந்தத்துக்கு பதிலாக நீண்டகால ஒப்பந்தங்களாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசு கடந்த 2 மாதங்களில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.1,593 கோடி சேமித்தது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதிநிலைமையை சரிசெய்யவும், நுகர்வோர் சேவையை மேம்படுத்தவும், மின்அளவீடு மற்றும் கணக்கீட்டை செல்போன் செயலி மூலம் அறிந்துகொள்ளவும், கட்டணம் செலுத்தவும் புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

அதனைத்தொடர்ந்து மின் ஆய்வுத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மின் வரி வசூல் குறித்தும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒழுங்குமுறை விதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னேரி பேரூராட்சியில் தெருக்களில் மழைநீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கும் சாலைகள்
பொன்னேரி பேரூராட்சியில் தெருக்களில் மழைநீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கும் சாலைகள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு.
2. தனி விமானத்தில் டெல்லி பயணம்: ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். அப்போது, ‘நீட்' தேர்வு, மேகதாது அணை விவகாரம் உள்பட பல்வேறு தமிழக பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.
3. பழங்குடியினருக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை
பழங்குடியினருக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
4. மீனாட்சி நகரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ் மீனாட்சி நகரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
5. 100-வது பிறந்தநாள்: என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
100-வது பிறந்தநாளை கொண்டாடிய என்.சங்கரய்யாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவரின் தியாகத்தையும், எளிமையையும் போற்றுவதாக புகழாரம் சூட்டினார்.