மாநில செய்திகள்

"தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது" - முதல்-அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்பி + "||" + "DMK rule is better in Tamil Nadu" - Former AIADMK MP praising First Minister Stalin

"தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது" - முதல்-அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்பி

"தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது" - முதல்-அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்பி
தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது என முதல்-அமைச்சர் ஸ்டாலினை அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் புகந்துள்ளார்.
தஞ்சாவூர்,

இது குறித்து தஞ்சாவூர் ரகுமான் நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை கொடுத்தார்களோ அவர் சிறப்பான ஆட்சியைத் தருகிறார். தளபதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதை கண்டு மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நானும் மகிழ்ச்சியடைகிறேன்,பெருமை படுகிறேன். எப்போதும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

மக்கள் ஆட்சி தத்துவத்தின்படி பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதல் படி அவரின் கொள்கைகளை பின்பற்றி மிக சிறப்பாக ஆட்சி செய்கின்ற தளபதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்துவதற்கு இந்த நேரத்தில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது என தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் முதல்-அமைச்சர் ஸ்டாலினை புகந்து உள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்? : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
2. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 3-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
4. தமிழகத்தில் நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்!
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
5. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.