மராட்டியத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 3.12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்


மராட்டியத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 3.12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
x
தினத்தந்தி 23 July 2021 7:32 PM GMT (Updated: 23 July 2021 7:42 PM GMT)

மராட்டியத்தில் இருந்து 3.12 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்துள்ளன.



சென்னை,

நாட்டில் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் கொரோனா 3வது அலையில் இருந்து தற்காத்து கொள்ள 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ், தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மராட்டியத்தின் புனேவில் உள்ள மருத்துவ கிடங்கிலிருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது. அந்த தடுப்பூசிகள் அடங்கிய 26 பார்சல்கள் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், புனேவிலிருந்து நேற்று 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. 

இதனையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுப்பூசி பார்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  அவை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.  இதனால் தடுப்பூசி போடும் ஆவலில் உள்ள பொதுமக்களின் தேவையானது பூர்த்தி செய்யப்பட உள்ளது.


Next Story