தமிழக கவர்னருடன் பா.ஜ.க. மாநில தலைவர் சந்திப்பு


தமிழக கவர்னருடன் பா.ஜ.க. மாநில தலைவர் சந்திப்பு
x
தினத்தந்தி 23 July 2021 10:14 PM GMT (Updated: 23 July 2021 10:14 PM GMT)

தமிழக கவர்னர் பன்வாரிலாலுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.


சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் சமீபத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் கவர்னருக்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின்போது அக்கட்சியின் பொது செயலாளர் கே.டி. ராகவன், துணை தலைவர்கள் எம். சக்ரவர்த்தி, எம்.என். ராஜா, வி.பி. துரைசாமி ஆகியோர் உடன் இருந்தனர். கவர்னரை அண்ணாமலை சந்தித்தது, மரியாதை நிமித்தமானது என்று கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது.


Next Story