செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது


செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது
x
தினத்தந்தி 24 July 2021 12:05 AM GMT (Updated: 24 July 2021 12:05 AM GMT)

செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

சென்னை,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரிப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரத்தின் அளவில், பிரான்ஸ் போன்ற ஒரு தாராளமயமாக்கப்பட்ட ஜனநாயகத்துக்கும், இஸ்ரேல் போன்ற கடுமையான ஜனநாயகத்துக்கும் எதிராக இந்தியாவை வரிசைப்படுத்துங்கள். (பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்) பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட உள்ளது. செல்போன் ஒட்டுக்கேட்பு புகார்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் ஆணையம் ஒன்றையும் அமைத்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கண்காணிப்பும் இல்லை என்று இந்தியா மறுக்கிறது. மேலும் இந்த விவகாரத்தை பற்றி விவாதிக்கவும் மறுத்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story