மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.55 அடியாக சரிவு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.55 அடியாக சரிவு
x
தினத்தந்தி 24 July 2021 4:10 AM GMT (Updated: 24 July 2021 5:31 AM GMT)

கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக இருந்த நிலையில் இன்று 72.55 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,020 கன அடியிலிருந்து 6,841 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 34.93 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. 

Next Story