மாநில செய்திகள்

அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் + "||" + To build dams in districts where there are no dams - chief Minister Stalin

அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும் - முதல்-அமைச்சர் ஸ்டாலின்

அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும் - முதல்-அமைச்சர் ஸ்டாலின்
அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
சென்னை,

முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள், அத்துறையின் மூலம் செயல்படும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்கவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேகரித்து பயன்படுத்தவும், அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகள் உருவாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.