மாநில செய்திகள்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் + "||" + 15 days court custody for Pastor George Ponnaya

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை,

இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர்  ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாகவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத அருள்தந்தை  ஜார்ஜ்  பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத மாதா, தலைவர்களை விமர்சித்த வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.