மாநில செய்திகள்

ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு - சபாநாயகர் அப்பாவு + "||" + Portrait of former First Minister Karunanidhi unveiled in Tamil Nadu Assembly on August 2 - Speaker Appavu

ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு - சபாநாயகர் அப்பாவு

ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு - சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
சென்னை, 

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். படத்திறப்பு விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடு சட்டப் பேரவைச் செயலகத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

முன்னதாக டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் இது - முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம் பெற்றுள்ளது.
2. தமிழக சட்டப்பேரவை வரும் 21ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது
கவர்னர் உரைக்கு பின் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.