மாநில செய்திகள்

டெல்லியில் பாராட்டிவிட்டு தமிழகம் வந்ததும் மத்திய அரசை குறை கூறுவதா? தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி + "||" + Do you blame the Central Government when you come to Tamil Nadu after praising in Delhi? BJP to DMK State President Annamalai questioned

டெல்லியில் பாராட்டிவிட்டு தமிழகம் வந்ததும் மத்திய அரசை குறை கூறுவதா? தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

டெல்லியில் பாராட்டிவிட்டு தமிழகம் வந்ததும் மத்திய அரசை குறை கூறுவதா? தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி
டெல்லி செல்லும்போது கொரோனா தடுப்பூசியை நிறைவாக வழங்குகிறார்கள் என்று கூறும் நிலையில் தமிழகம் திரும்பியவுடன் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என கூறுவதா? என்று தி.மு.க.வுக்கு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை,

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திருவண்ணாமலை வந்தார். இங்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருக்கக்கூடிய (ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்) ஒருவருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில பணிகளை செய்யப்பட்டதாக மதுரை உதவி ஆணையர் தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கிறார். இருப்பினும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையரை பணியில் இருந்து விடுவித்து இருப்பதை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த தவறும் செய்யவில்லை. அவர் விரைவாக பணியில் அமர்த்தப்பட வேண்டும்.


கொரோனா தடுப்பூசி

மத்திய அரசு நிர்ணயித்த இலக்கைவிட அதிகமாகவே மாநில அரசுக்கு கொரோனா தடுப்பூசியினை வழங்கி வருகிறது. மத்திய அரசு குறைவாக தடுப்பூசி வழங்கி இருந்தால் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை கொடுக்கட்டுமே. இவர்கள் டெல்லி செல்லும் போதெல்லாம் மத்திய அரசு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு அளித்து நிறைவான கொரோனா தடுப்பூசியினை வழங்குகிறார்கள் என்றும், மீண்டும் சென்னை வந்தவுடன் பேச்சை மாற்றி தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும் சொல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.
2. ‘15 கிலோ உடை அணிந்து நடித்த அனுபவம்’ - நடிகை ராய்லட்சுமி பேட்டி
‘15 கிலோ உடை அணிந்து நடித்த அனுபவம்’ - நடிகை ராய்லட்சுமி பேட்டி.
3. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்
ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.
5. வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க ஏற்பாடு
வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.