திமுக நீண்ட வரலாறு கொண்டது: திமுகவினர் வரலாறு தெரிந்தவர்கள் - அமைச்சர் நாசர்


திமுக நீண்ட வரலாறு கொண்டது: திமுகவினர் வரலாறு தெரிந்தவர்கள் - அமைச்சர் நாசர்
x
தினத்தந்தி 25 July 2021 12:12 PM GMT (Updated: 25 July 2021 12:12 PM GMT)

'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்தினை, அமைச்சர் நாசர் விமர்சனம் செய்துள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத் துறை அமைச்சரும் நாசர் இன்று வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நாசர், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறு தெரியாது. கொள்கை கோட்பாடு அடிப்படையில் இயக்கத்திற்கு வரவில்லை, திமுக நீண்ட வரலாறு கொண்டது திமுகவினர் வரலாறு தெரிந்தவர்கள்” என்று அவர் கூறினார்.

Next Story