மாநில செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் பற்றி விசாரணை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி + "||" + AIADMK Inquiry into non-standard mask in the regime: Minister Ma. Subramanian

அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் பற்றி விசாரணை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் பற்றி விசாரணை:  அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியது பற்றி விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில், கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு 5,300 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  இதில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நாடா துணியினால் தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இதனை அணிவதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கு இதுவரை ரூ.5 கோடி வந்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தினை வரும் புதன்கிழமை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை
திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை 32 பெண்களை ஏமாற்றியதாக திடுக்கிடும் வாக்குமூலம்.
2. அரசு அதிகாரி மீது ரூ.9 லட்சம் மோசடி புகார் போலீசார் விசாரணை
அரசு அதிகாரி மீது ரூ.9 லட்சம் மோசடி புகார் போலீசார் விசாரணை.
3. ஆர்.கே.பேட்டையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து கர்ப்பிணி தற்கொலை போலீசார் விசாரணை
ஆர்.கே.பேட்டையில் தீராத வயிற்று வலி காரணமாக 4 மாத கர்ப்பிணி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. அரியானாவில் ஜே.இ.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் விசாரணை; காங்கிரஸ் வலியுறுத்தல்
அரியானாவின் சோனிபட்டில் ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றுக்கு தொடர்பான 19 இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தி உள்ளனர்.
5. தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என வழக்கு
தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.