மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் தாயார் மரணம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல் + "||" + Former Minister P. Valarmati's mother's death: O. Panneerselvam, Edappadi Palanisamy condolences

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் தாயார் மரணம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் தாயார் மரணம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் தாயார் மரணம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்.
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-


அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதியின் தாயார் செல்லம்மாள் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

பாசமிகு தாயாரை இழந்து வாடும் பா.வளர்மதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், செல்லம்மாளுடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.