மாநில செய்திகள்

ஆகஸ்டு 15-ந்தேதி முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார் + "||" + On August 15, MK Stalin's flag is hoisted at the fort for the first time

ஆகஸ்டு 15-ந்தேதி முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார்

ஆகஸ்டு 15-ந்தேதி முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார்
சென்னையில் உள்ள கோட்டையில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலாக தேசிய கொடியை ஏற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை,

சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார். இதனையொட்டி பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் பகுதிகளில் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் விழா நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளது.


பிரமாண்ட மேடை

நிகழ்ச்சிகளை பார்வையிடும் வகையில் அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதியாக கோட்டை கொத்தளத்தின் எதிரே 3 பிரமாண்டமான மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

ஒத்திகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சியையொட்டி விரைவில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுதந்திரதின நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா காலமாக இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் குடியரசு தின விழா: வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு பதக்கங்கள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழகத்தில் வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கான பதக்கங்களை சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. கொரோனா பரவல் தடுப்பு, ஊரடங்கு தளர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
3. குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
4. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5. இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்துங்கள் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.