'சர்கார்' திரைப்படம் தொடர்பான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 July 2021 11:51 AM GMT (Updated: 26 July 2021 11:51 AM GMT)

சர்கார் திரைப்படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீசார் தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

சர்கார் படத்தில் அரசு கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்பட அரசின் இலவசப் பொருட்களை வீசுவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இதுதொடர்பாக, சர்கார் படத்தில், இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் அரசின் இலவசப் பொருட்களை வீசுவது போல காட்சி அமைத்தது தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை செய்த திரைபடத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தனது உத்தரவில் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Next Story