மாநில செய்திகள்

கார்கில் வெற்றி நாள்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி + "||" + Kargil Victory Day: BJP pays homage to portraits of fallen soldiers

கார்கில் வெற்றி நாள்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி

கார்கில் வெற்றி நாள்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி
கார்கில் வெற்றி நாள்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி அண்ணாமலை, இல.கணேசன் பங்கேற்பு.
சென்னை,

1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் ஜூலை மாதம் 26-ந் தேதி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் கார்கில் வெற்றி நாள் நிகழ்ச்சி சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். மூத்த தலைவர் இல.கணேசன், ராணுவ பிரிவின் துணைத்தலைவர் கேப்டன் ஜி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், ஊடக பிரிவு மாநில தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

இதில் கார்கில் போரில் உயிரிழந்த 527 ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேஜர் சரவணன் உள்பட வீரர்கள் உருவப்படங்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்கள் சிலர் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கே.அண்ணாமலை பேசும்போது, ‘போலி சித்தாத்தங்களை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை பிரிந்தாளும் சூழ்ச்சியை சிலர் செய்து வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உண்மையான தேசியம் சென்றடைய வேண்டும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்: ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் சோதனையை மகேந்திரகிரியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்து உள்ளனர் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.
2. ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி
தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து வரும் வெற்றி திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. புரோ கபடி:தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி
நேற்றைய போட்டியில் புனேரி பால்டனை வீழ்த்தியது.
5. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஆண்டிரே ரூப்லெவ் வெற்றி
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ஆண்டிரே ரூப்லெவ் வெற்றி பெற்றுள்ளார்.