மாநில செய்திகள்

கட்சியினர் துரோகம் செய்து விட்டனர் தபால் ஓட்டுகளால்தான் ஜெயித்தேன் அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு + "||" + The parties have been betrayed by postal ballots

கட்சியினர் துரோகம் செய்து விட்டனர் தபால் ஓட்டுகளால்தான் ஜெயித்தேன் அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

கட்சியினர் துரோகம் செய்து விட்டனர் தபால் ஓட்டுகளால்தான் ஜெயித்தேன் அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு
கட்சியில் சிலர் துரோகம் செய்துவிட்டதாகவும், தபால் ஓட்டுகளால்தான் வெற்றிபெற்றதாகவும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலூர்,

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவலத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-


துரோகம் செய்து விட்டனர்

நடைபெற்ற காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது நாம் ஜெயித்து விடுவோம் என்று சிலர் சரியாக வேலை செய்யாமல் இருந்து விட்டனர். அதோடு மட்டுமல்லாமல் நம் கட்சியில் முதல் முறையாக சிலர் துரோகம் செய்து விட்டனர். நல்ல வேளையாக தபால் ஓட்டினால் நான் ஜெயித்து விட்டேன். அமைச்சரும் ஆகிவிட்டேன். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இவ்வாறு இருக்காமல், உள்ளாட்சியின் அனைத்து பதவிகளிலும் நமது கட்சியினர் வெற்றி பெற வேண்டும். அதற்காக கடுமையாக ஒற்றுமையுடன் உழையுங்கள்.

அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை கொண்டு வந்தது நான். இது போன்று காட்பாடி தொகுதியில் குறைகளே இல்லாத அளவுக்கு பணிகளை செய்துள்ளேன். ஆனாலும் நீங்கள் எனக்கு சரியாக வேலை செய்யவில்லை. குறிப்பாக திருவலம் பகுதியில் எனக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கோட்டையாக இருந்த திருவலத்தை தி.மு.க. கோட்டையாக மாற்றி இருந்தோம். எனக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்தவர்களை நான் மன்னிக்கிறேன். ஒரு குழந்தை தாயை கடித்துவிட்டால் தன் குழந்தை மேல், தாய் கடிந்து கொள்வதில்லை. அது போல் நான் தாயைப் போன்று துரோகம் செய்த நமது கட்சிக்காரர்களை மன்னித்து அவர்களுக்கும் உதவிகளை செய்வேன்.

சர்வாதிகாரியாக செயல்படுவேன்

இனியாவது நல்ல முறையில் கட்சிப் பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் நமது கட்சியினரை வெற்றிபெற செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் நான் சர்வாதிகாரி போல் செயல்படுவேன். யாரை நிற்க வைத்தால் வெற்றி பெறுவார் என்று தீர்மானித்து அவரை நிற்க வைப்பேன். அவரை நீங்கள் வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் தேவை’ மாநில திட்டக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் தேவை’ என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. எம்.ஜி.ஆரின் வரலாற்றை திரித்து கூறுவதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
எம்.ஜி.ஆரின் வரலாற்றை திரித்து தவறாக செய்தி அறிக்கை வெளியிட்ட தி.மு.க. அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் 600 இடங்களில் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகத்தில் 600 இடங்களில் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. அரசு பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நிறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5. ‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி
வருகிற 22-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.