மாநில செய்திகள்

புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன + "||" + 4 lakh vaccines came to Chennai from Pune

புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 98 லட்சத்து 80 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 95 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.


ஜூலை மாத ஒதுக்கீடாக தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க முடிவு செய்தது. ஆனால் இதுவரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே வழங்கி உள்ளது.

இந்தநிலையில் புனேவில் இருந்து வந்த விமானத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 34 பெட்டிகளில் 4 லட்சத்து 8 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மத்திய தொகுப்பில் இருந்து ஜூலை மாத ஒதுக்கீட்டில் 54 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.

அதேநேரத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை 2 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர் மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அக்டோபர் மாதத்துக்குள் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சம் கொள்ளை
வெல்டிங் மெஷின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3. நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
4. நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75.81 கோடியாக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்
சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்.