மாநில செய்திகள்

பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார் + "||" + The female police officer was transferred to the video viral Armed Forces, where she was bribed

பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்

பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்
பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
கோவை,

கோவை பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் பாப்பாத்தி. இவர் சம்பவத்தன்று டி.கே.மார்க்கெட் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது வாகன ஓட்டி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இந்த காட்சியை அந்த பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரை ஆயுதபடைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ கடந்த 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த பெண் போலீசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணம் கொடுத்தவர் யார்? எதற்காக பணம் கொடுத்தார் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிகினி உடையில் வலம் வரும் கிரண்... வைரலாகும் வீடியோ
ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
2. வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ
திரைப்பட நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ படத்தில் இடம்பெறும் துல்கர் சல்மான் பாடிய பாடலின் சிறிய தொகுப்பு வைரலாகி வருகிறது.
3. தீவிர உடற்பயிற்சியில் சமந்தா... வைரலாகும் வீடியோ
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.
4. வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி வீடியோ
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரலாகி வருகிறது.
5. தன் ஜோடியை புதைத்த இடம் வரை சென்று அங்கேயே காத்திருந்த மயில்.! உருக்கமான காட்சி
17 லட்சம் பேர் பார்த்து வருத்தப்பட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.