மாநில செய்திகள்

மக்கள்தொகை, பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கான தடுப்பூசி வினியோகத்தை சீரமைக்க வேண்டும் + "||" + We need to realign the distribution of vaccines to the states based on population and vulnerability

மக்கள்தொகை, பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கான தடுப்பூசி வினியோகத்தை சீரமைக்க வேண்டும்

மக்கள்தொகை, பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கான தடுப்பூசி வினியோகத்தை சீரமைக்க வேண்டும்
மக்கள்தொகை, பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கான தடுப்பூசி வினியோகத்தை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்.
சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவியது முதல் அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பா.ஜ.க. நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2021 மதிப்பீட்டின்படி மொத்த மக்கள்தொகை 7.88 கோடி. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870. இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மொத்த மக்கள்தொகை 6.48 கோடி. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 546 பேர். அம்மாநிலத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 770. இந்த 2 மாநிலங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கு புரியும். இத்தகைய அணுகுமுறையை பிரதமர் கையாளுவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.


கொரோனாவில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவேண்டிய மோடி, தனது சொந்த மாநிலத்துக்கு சலுகை காட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல. இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையைத் தவிர்த்து, தடுப்பூசி வினியோகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள்தொகை மற்றும் பாதிப்பின் அடிப்படையில் ஒரு தெளிவான கொள்கையை வகுத்து தடுப்பூசி வினியோகத்தைச் சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மூன்றாவது அலையில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்: ஆய்வுத்தகவல்
கொரோனா மூன்றாவது அலையில் 60 சதவீத இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற ஒரு ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
2. தமிழகத்தில் சிறப்பு முகாம்: ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
3. டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை..!
டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
4. கொரோனா தடுப்பூசி பணி தொடங்கி ஓராண்டு நிறைவு 157 கோடி ‘டோஸ்’ செலுத்தி சாதனை
கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 157 கோடி டோஸ் செலுத்தி சாதனை படைத்துள்ளதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
5. ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும்..! பிரபல மருந்து நிறுவனம் தகவல்
ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.