மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் + "||" + 69% reservation in medical studies: One week to report federal status

மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம்

மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம்
மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த தன் நிலையை தெரிவிக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.
சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்தது. ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அவகாசம்

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் 2021-22 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்த மத்திய அரசின் நிலையை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரூ.500 கோடி கிராவல் மண் எடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான புகாரில் அதிகாரிகள் மீது விசாரணை
ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மண்ணை எடுத்ததாக முன்னாள் துணை முதல்-அமைச்சர் மீதான புகாரில், அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை
மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை.
3. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் நேரடி விசாரணை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் மீது, புகார்கள் வந்த அரைமணி நேரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கலா? 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூர் பகுதியில் பதுங்கி இருக்கிறாரா? என்பது குறித்து விசாரணை நடத்த அ.தி.மு.க.வினர் 2 பேரை தனிப்படையினர் அழைத்து சென்றனர்.