பயணிகளின் புகாரை ஏற்று நடவடிக்கை: பணியின்போது டிரைவர்கள் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக்கூடாது


பயணிகளின் புகாரை ஏற்று நடவடிக்கை: பணியின்போது டிரைவர்கள் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக்கூடாது
x
தினத்தந்தி 27 July 2021 4:16 AM GMT (Updated: 27 July 2021 4:16 AM GMT)

பயணிகளின் புகாரை ஏற்று நடவடிக்கை: பணியின்போது டிரைவர்கள் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக்கூடாது அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களின் டிரைவர்கள் பணியின்போது அசட்டையாக செல்போன்களை பயன்படுத்துவதாக பயணிகளிடம் இருந்து நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து அரசு போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, பணியின்போது டிரைவர்கள் செல்போன்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக டிரைவர்கள், கண்டக்டர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வின்போது காண்பிப்பதற்காக பணியில் இருக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்களது உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.

* பெயர், பணி எண் உடன் கூடிய வில்லை அணிந்திருக்க வேண்டும்.

* டிரைவர்கள் கண்டிப்பாக பணியின்போது செல்போன் உபயோகப்படுத்தக்கூடாது. கண்டக்டரிடம் கொடுத்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த விதிமுறைகளை டிரைவர்கள், கண்டக்டர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பாட்டால் அவர்களே பொறுப்பு ஆவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story