மாநில செய்திகள்

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்: டிடிவி தினகரன் + "||" + Our effort and Sasikala's effort is to restore the AIADMK: TTV Dinakaran

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்: டிடிவி தினகரன்

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்: டிடிவி தினகரன்
எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்று அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி, 

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அதிமுக தொடங்கப்பட்டது முதல் ஒற்றைத்தலைமையில்தான் பயணித்தது. மீண்டும் அது சரியாகும், தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. தங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான். அதை நோக்கிதான் பயணம் செய்கிறோம். கொள்கைக்காக வந்தவர்கள் எங்களுடன் இலக்கை நோக்கி பயணிப்பார்கள், சுயநலத்திற்காக வந்தவர்கள் செல்கின்றனர். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அதை தற்போது மறந்து செயல்படுகிறார்கள்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றுவதா? அதிமுக கடும் கண்டனம்
அம்மா வளாகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று வைப்பது நாகரிகமற்ற செயல் என ஓபிஎஸ்- இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
2. அ.தி.மு.க-வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. குஜராத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் புது முயற்சி...
குஜராத்தில் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி போட்டனர்.
4. அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - கடம்பூர் ராஜு
அதிமுகவில் இனி இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
5. ஈபிஎஸ் காரை முற்றுகையிட்ட அமமுகவினர் : அதிமுக - அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் காரை அமமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.