தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்தால் கடும் நடவடிக்கை - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை


தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்தால் கடும் நடவடிக்கை - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 July 2021 2:11 PM GMT (Updated: 27 July 2021 2:11 PM GMT)

தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யும் பத்திர ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சென்னை,

சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பத்திர பதிவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யும் பத்திர ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். மேலும் பத்திரப்பதிவு சேவை மையத்திற்கு வந்த புகார்கள் மீது ஒரு மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது என்றும் இதுவரை கிடைத்த 5 ஆயிரம் புகார்களில் 2,500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

Next Story