மாநில செய்திகள்

சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை + "||" + Tourism Development Office staff besieged

சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை

சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை
சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
ஊழியர்களுக்கான 9 மாத நிலுவை சம்பளத்தை உடனே வழங்கவேண்டும். காரைக்கால் சீகல்ஸ் உணவகத்தில் மது விற்பதற்கான தடையை உடனே நீக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் கடற்கரை சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினார்கள். போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் கஜபதி முன்னிலை வகித்தார். ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து மேலாண் இயக்குனர் ஜார்ஜ் மாறம், ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்று ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-----