தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி: தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி: தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x

தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி: தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தூய்மை பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மனுவில், துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும்போது மரணம் அடைய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிரந்தரப் பணியாளர்களைப் போல இடர்படி கோர உரிமையில்லை. அதேநேரம், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தூய்மைப் பணியாளர்களின் பணியில் இடர்பாடு எதுவும் இல்லை என்று கோவை மாநகராட்சி கூறுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை பதில்மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story