உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி


உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 27 July 2021 11:19 PM GMT (Updated: 27 July 2021 11:19 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை,

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் டெல்லி சென்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று இரவு அவர்கள் இருவரும் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அ.தி.மு.க. அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்றார். அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று டி.டி.வி.தினகரன் கூறியது, முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது உள்ளிட்டவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் அதற்கு பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

Next Story