மாநில செய்திகள்

ஜூலை 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + July 28: Petrol and diesel prices in Chennai today

ஜூலை 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஜூலை 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 12-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன.  

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100- ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பா.ஜ.க. சார்பில் கால்பந்து போட்டி
தமிழக பா.ஜ.க. சார்பில், பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பா.ஜ.க. தென்சென்னை மாவட்டம் சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
2. சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும், ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. சென்னையில் முககவசம் அணியாத 1,163 பேர் மீது வழக்கு
கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
5. ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை
ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.