மாநில செய்திகள்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் + "||" + MK Stalin's instruction to create new technical units in government vocational training centers

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்குதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப பிரிவுகளை தேவைப்படும் இடங்களில் துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


கட்டுமான திறன் பயிற்சி மையம்

புதிய வேலைவாய்ப்புகளை நம் இளைஞர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கென அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், தொழிற்சாலைகளின் எதிர்காலத் தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சி வழங்கவும், அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆற்றிவரும் பணிகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடுகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்பயிற்சி நிலையங்களின் செயல்பாடுகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களின் மீது விரைவாகத் தீர்வுகண்டு பயனாளிகளுக்கான பலன்கள், நலத்திட்ட உதவிகள், குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அரசின் திறன் மேம்பாடு தொடர்புடைய திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில், தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான விர்ச்சுவல் ரியாலிட்டி, க்ளவுட் கம்ப்யூட்டிங், 3-டி பிரிண்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில் திறன் பயிற்சிகள் வழங்கவும், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளின் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினார்.

வேலைவாய்ப்பு நிறுவனங்கள்

மேலும், அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு நிறுவனங்களை இணைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ் அதிகமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் மருத்துவமனைகள் துவக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து மருந்தகங்களிலும் ஆய்வக வசதிகள் உருவாக்கவும் கூடுதலாக ஆயுஷ் மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சேவைகள் கணினிமயம்

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தால் இணையதளம் மூலம் ஏற்கனவே வழங்கப்படும் சேவைகளுடன் சுலபமாகத் தொழில் நடத்தும் வசதிகளைத் தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தித் தருவதற்காக வளைதளத்தில் சில மாற்றங்களைச் செய்யவும், மேலும் சேவைகளை கணினிமயமாக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளர் இரா.கிர்லோஷ் குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவராவ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் கே.ஜெகதீசன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) ஜி.அசோக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்.
2. 77-வது பிறந்த நாள்: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
3. ரூ.699 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மகளிர் சுயஉதவி குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் உள்பட ரூ.699.26 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
4. என்ஜினீயரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி என்ஜி னீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
5. கொளத்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கொளத்தூர் தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.