அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் முத்தரசன் அறிவிப்பு


அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் முத்தரசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 July 2021 3:16 AM GMT (Updated: 28 July 2021 3:16 AM GMT)

அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் முத்தரசன் அறிவிப்பு.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கியூபா நாட்டையும் அதன் மகத்தான புரட்சியையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி கல்வியில், மருத்துவத்தில் மகத்தான சாதனைகள், வேளாண்துறையில் தற்சார்பு, தன்னிறைவு என நிலைகுலையாமல் சோஷலிச கியூபா முன்னேறுகிறது.

கியூபா மீதான தடையை நீக்குக என ஐ.நா. சபை பலமுறை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றியது. இந்தியா போன்ற உலகின் ஜனநாயக நாடுகள் கியூபா மீது பொருளாதார தடையை நீக்குக என பலமுறை கேட்டுக்கொண்டது.

எதற்கும் மதிப்பு அளிக்காமல் கியூபாவை சீர்குலைக்க, அழித்து ஒழிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் துடிக்கிறது. அப்பட்டமாக கியூபாவின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது.

இத்தகைய சூழலில் இந்தியாவின் நட்பு நாடாம் கியூபாவிற்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கும் விதமாகவும் 29-ந் தேதி (நாளை) சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ. (எம்.எல்.லிபரேஷன்) ஆகிய கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story