மாநில செய்திகள்

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு + "||" + DMK is in power by making false election promises -says eps

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அதிமுக ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.   திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நீட்தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி போராட்டம் நடைபெற்றது.

 போராட்டத்திற்கிடையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  10 ஆண்டுகள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தது அதிமுக அரசு. 

முந்தைய அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது.

 திமுகவின் பெட்ரோல், டீசல் விலை  குறைப்பு வாக்குறுதி என்னாச்சு? திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அதிமுக ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுடன் நடைபெர வாய்ப்பு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. கொடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு
கொடநாடு விவகாரத்தில், வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று புலன் விசாரணைக்குழு மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3. மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல. கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. கொடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மக்களை திசை திருப்ப திமுக அரசு நாடகமாடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை -சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல்; 2011ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்கும்போதும் கடன்சுமை இருந்தது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.