மாநில செய்திகள்

அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம் + "||" + No place for Sasikala, her kin in AIADMK OPS Hints

அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
போடி,

போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அ.தி.மு.க.வினர் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதன் பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நானும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் அதிமுக.,வை வழிநடத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நிலை தொடரும். ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய மத்தியில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கக்கூடிய பாஜகவுக்குத்தான் உரிமை உள்ளது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: ஜெயக்குமார் விமர்சனம்
சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
2. மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்: சசிகலா பேட்டி
என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து இருக்கிறேன் என்று சசிகலா கூறினார்.
3. அ.தி.மு.க.புதிய அவைத் தலைவர் யார்...? ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அக்டோபர் 17ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொன்விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
4. "இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது" சசிகலா தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டம்...?
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.
5. சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள்; அனைவரது இதயங்களையும் கவர்ந்தவர் துரைமுருகன் ; ஓ பன்னீர்செல்வம் புகழாரம்
எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.