வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு; 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை


வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு; 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2021 1:07 PM GMT (Updated: 28 July 2021 1:07 PM GMT)

வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து, 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதில் முழுக்கொள்ளளவாக 69 அடி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணை நேற்று முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது.  

வைகை அணையில் இருந்து ஏற்கனவே கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு  இருந்தது. இந்த சூழலில் நேற்று அணை நிரம்பியதை தொடர்ந்து 3-ம்  கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும் வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் உயர்ந்தால் மட்டும் தான், 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்ற வகையில் அணையின் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால், 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள 58 கிராமங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story