பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர தயார்: தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி


பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர தயார்:  தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 29 July 2021 2:27 AM GMT (Updated: 29 July 2021 2:27 AM GMT)

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.


சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மக்களை பெரிதும் பாதிப்பிற்குள் ஆளாக்கியுள்ளது.  இதுதவிர, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வாலும் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.  அதனை நம்பித்தான் தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வாட் வரியை விதிக்கும் தி.மு.க. அரசு, விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் குறை கூறுகிறது.  மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர தமிழக நிதியமைச்சர் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கோரிக்கை வைப்பாரா? என்று கேட்க விரும்புகிறேன்.

தி.மு.க.வின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவே அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர்.  அ.தி.மு.க.வின் இந்த போராட்டத்தை பா.ஜ.க. வரவேற்கிறது என அவர் கூறியுள்ளார்.


Next Story