மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்வு + "||" + Gold price rises by Rs.184 per sovereign in Chennai

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 240க்கு இன்று விற்பனையாகிறது.


சென்னை,

நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இதனால், தொழில் துறை முடக்கம், வருவாய் இழப்பு, பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினர்.

இதனால், தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.  இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும்பொழுது இன்று உயர்ந்துள்ளது.  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.23 உயர்ந்து ரூ.4,530க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 240க்கு விற்பனையாகிறது.  24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39 ஆயிரத்து 152க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து கிராமுக்கு ரூ.72.20-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72 ஆயிரத்து 200 ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி 459% உயர்வு; காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் மீது கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி 459% உயர்த்தப்பட்டு உள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
2. உ.பி. கலவரம்: உயிரிழப்பு 9 ஆக உயர்வு; இழப்பீடு அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.
3. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. கோமுகி அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உயர்வு
கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உயர்ந்துள்ளது.
5. உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது.