கிஷோர் கே சுவாமி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு


கிஷோர் கே சுவாமி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 29 July 2021 10:48 AM GMT (Updated: 29 July 2021 10:48 AM GMT)

தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கிஷோர் கே சுவாமி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக கிஷோர் கே சுவாமி மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கிஷோர் கே சுவாமியை கடந்த மாதம் 14 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையில், கிஷோர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்தது. 

இதனை தொடர்ந்து கிஷோர் கே சுவாமி, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Next Story