மாநில செய்திகள்

அரசு டாக்டருக்கு மதுபாட்டில் குத்து + "||" + Bottle punching to government doctor

அரசு டாக்டருக்கு மதுபாட்டில் குத்து

அரசு டாக்டருக்கு மதுபாட்டில் குத்து
புதுவையில் அரசு டாக்டருக்கு மதுபாட்டில் குத்து விழுந்தது.
புதுச்சேரி, ஜூலை.30-
புதுச்சேரி கோவிந்தசாலை சுப்ரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 47). கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று     இவர்   உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆக்கி விளையாடி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.   அப்போது வம்பாகீரப்பாளையம்          பகுதியை சேர்ந்த குரங்குகுமார் என்ற குமார் (40), மணிவண்ணனை வழிமறித்து மதுகுடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார், அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து மணிவண்ணனை குத்திவிட்டு தப்பி சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
---