மாநில செய்திகள்

சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் - தங்க தமிழ்செல்வன் பேட்டி + "||" + Sasikala will soon capture the AIADMK Interview with Thanga Thamilselvan

சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் - தங்க தமிழ்செல்வன் பேட்டி

சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் - தங்க தமிழ்செல்வன் பேட்டி
சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் என்று தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
போடி,

தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ஆய்வு செய்தார். 

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை வழிநடத்த தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளத்தான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 10 ஆண்டு காலமாக போடி தொகுதிக்கு செய்யாத திட்டங்களை தற்போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கையாக வைக்கின்றனர். இதனால் நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவதற்கு தகுதி இல்லை.

இன்றைக்கு சசிகலா, தனிப்பட்ட குடும்பம் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றுவார். 

இவ்வாறு அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் சசிகலா முன்னிலையில் நடந்தது
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
2. சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.
3. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் 4 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
4. சிறையில் சொகுசு வசதி? சசிகலாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!
விசாரணையின் போது கர்நாடகா நீதிமன்றம், விசாரித்தவரை உள்ள தகவல்களை குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
5. நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா? சசிகலா விளக்கம்
நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினேனா? என்பது குறித்து சசிகலா பதில் அளித்துள்ளார்.